அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வாய் மூடி மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் பேட்டியளித்த அவர், ஜனநாயக ரீதியாக போராடுபவர்களை கைது செய்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் குரலை திமுக அரசால் ஒடுக்க முடியாது என்றும், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.