டெல்லியில் பிரதமர் மோடியை பஞ்சாப் பின்னணி பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசங்க் சந்தித்தார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், தில்ஜித் டோசங்க் பன்முகத்திறமை வாய்ந்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இதேப்போல் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தில்ஜித், பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்கமுடியாதது என்றும், இசை உட்பட நிறைய விஷயங்களைப் பற்றி பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.