தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோம் தொடங்கியுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுகு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு ரேஷன் கார்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் நேரம், தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நாளில் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கள் பரிசு தொகுப்புகளை வாங்கிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 9ஆம் தேதி முதல் பொங்க பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கான டோக்கன்களை நான்கு நாட்களில் வழங்கி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.