பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகை வரும் 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்ல ஆயிரத்து 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், வரும் 10-ம் தேதி 3 ஆயிரத்து 899 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வரும் 10 , 11 , 12 , 13 ஆகிய தேதிகளில் வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனிடையே ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பயணிகள் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.