பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கு நிகராக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே அரசு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலும், முன்பதிவு இணையதளங்களில் வெளிப்படையாகவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லைக்கு 4 ஆயிரம் ரூபாய் வரையும், கோவை மதுரைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது