டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்படும் - விரைவில் அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!
Mar 30, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்படும் – விரைவில் அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!

Murugesan M by Murugesan M
Jan 11, 2025, 09:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது

மதுரை அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி கிராமங்களைச் சுற்றி அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை, நிறுத்தி வைத்திருப்பதாக,  மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  அறிவித்திருந்தார். தமிழக அரசையும், சுரங்கம் அமைப்பது தொடர்பாக, மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்  ரெட்டி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னை வரவுள்ளார்.  அவரை, நமது கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, நமது மத்திய அமைச்சர் அறிவிக்கவுள்ளார்.

விவசாயிகள் நலன் சார்ந்தே பிரதமர் மேடி எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நமது பாரதப் பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: tungsten minesVallapattiMaduraiPongal festivalTamil Nadu BJP State President AnnamalaiMinister Kishan Reddy
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரோ தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிறப்பு தொகுப்பு!

Next Post

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டி!

Related News

அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை – கிராம மக்கள் சாலை மறியல்!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் அழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

விலைவாசி உயர்வால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் – சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று பலப்பரீட்சை!

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

நன்னிலம் அருகே தனியார் அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!

தேர்தல் விதிகளை மீறி பரப்புரை – திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி மீது வழக்குப்பதிவு

திமுகவில் சீட் கிடைக்காத விரக்தி – தவெகவு-க்கு தூது விட்ட அமைச்சர்!

காஞ்சிபுரம்:பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி வெள்ளி குதிரை வாகனத்தில் அருள்பாலித்தார் ஏகாம்பரநாதர் சுவாமி

தூத்துக்குடி-சென்னை இடையே இரவு நேர விமான சேவை தொடக்கம் !

ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு – மேற்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் உள்ளிட்டோர் போர்கொடி!

குமாரபாளையம்:போதை ஊசி, மருந்துகளை விற்பனை- 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies