மத்திய அரசு ஏழாயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கியும், பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கலுக்கு ரூ.1,000 கொடுக்காமல் திமுக அரசு மக்களை வஞ்சித்துவிட்டதாக தெரிவித்தார். “2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி சுலபமாக கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார். திமுக கூட்டணி கட்சியினர் பின்வாங்க ஆரம்பித்துவிட்டதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
















