ஈ.வெ.ரா. குறித்து பேசிய வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஈ.வெ.ரா. குறித்து சீமான் பேசியது சர்ச்சையான நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, பெண்கள் மத்தியில் ஈ.வெ.ரா. குறித்து தவறான கருத்துக்களை திணிக்கும் வகையில் சீமான் பேசி வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
சீமான் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி, உத்தரவிட்டார்.
சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல் நிலைய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.