தேசத்தின் விடுதலைக்கு பெரும் பங்களிப்பை வழங்கிய திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “இந்திய விடுதலைப் போராட்ட தியாகி, ‘கொடிகாத்த’ திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினம் இன்று. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேய அரசுக்கு எதிரான பேரணியின் போது, கைகளில் ஏந்தியிருந்த “தேசியக் கொடியை” தன் உயிரை விடவும் மேலாக கருதி,இறுகப் பிடித்துக் கொண்டே உயிர் நீத்த உன்னத ஆத்மா.
தேசத்தின் விடுதலைக்கு இளம் வயதில் தனது பெரும் பங்களிப்புகளை வழங்கிய திருப்பூர் குமரன் அவர்களின் நினைவு தினமான இன்று, அவரது தியாகத்தை போற்றி வணங்குவோம்” என எல்.முருகன் கூறியுள்ளார்.