யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!
Sep 19, 2025, 10:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யுஜிசி தொடர்பான தீர்மானம் தேவையற்றது – முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கருத்து!

Web Desk by Web Desk
Jan 11, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யுஜிசி விதிமுறைகள் குறித்து தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் தேவையற்றது என அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அவசர தீர்மானம் நிறைவேற்றியுள்ளது விந்தையாக இருக்கிறது எனவும்,

யுஜிசி விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் திமுக கூட்டணிக் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யுஜிசி பிறப்பித்துள்ள விதிமுறைகள் தற்போது வரைவு நிலையில்தான் உள்ளன எனவும், மக்கள் தங்களது யோசனைகளை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, யுஜிசி விதிகள் குறித்து தமிழக சட்டப் பேரவையின் தீர்மானம் தேவையற்றது என பாலகுருசாமி கூறியுள்ளார். மேலும், துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்தால் ஊழல் மற்றும் பாரபட்சம் மீண்டும் வந்து, உயர்கல்வியின் தரம் சிதைந்துவிடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில், துணைவேந்தர் பதவி, தரகர்கள் உதவியோடு 5 முதல் 10 கோடி ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது என்று முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோலவே, அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பியூன் முதல் பேராசிரியர் வரையிலான பதவிகளை நிரப்ப தொகை நிர்ணயிக்கப்பட்டது என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே, நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் யுஜிசி விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மத்திய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் மோதும் போக்கை தமிழக அரசு கைவிட்டு, உயர்கல்வியின் நலனுக்காக யுஜிசியுடன் இணங்கிச் செயல்பட வேண்டிய தருணம் இது என பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.

Tags: Former Anna University Vice-Chancellor Balagurusamytamil Nadu Legislative AssemblyUniversity Grants CommissionBALAGURUSAMYUGC regulations resolution
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் விழா கோலாகலம்!

Next Post

தேர்தல் ஆணையம் அனுமதி – ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

Related News

1,350 டன் யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் இடையூறு செய்யும் திமுக வட்டச்செயலாளர் – அண்ணாமலை கண்டனம்!

செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

பிரிட்டன் அரச குடும்ப நெறிமுறைகளை மீறிய ட்ரம்ப் – வலுக்கும் கண்டனம்!

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு – செபி நிராகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது – ராம.சீனிவாசன்

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies