இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், நிறுத்திவைக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் வருகிற பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று முதல் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.