ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு!
Sep 9, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – அதிமுக புறக்கணிப்பு!

Web Desk by Web Desk
Jan 11, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், மது, கொலுசு, குக்கர், தங்கக் காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் என, இவை எல்லாவற்றையும் தாண்டி திமுக-வின் மிரட்டல்,  அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது.

வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. திமுக-வினர் அழைக்கும் இடத்திற்கு வந்து காலை முதல் இரவு வரை உட்கார்ந்து இருக்கவில்லையென்றால், முதியோர் உதவித் தொகையோ, வேறு எந்த அரசு நலத் திட்டங்களோ வழங்கப்படமாட்டாது என்கிற மிரட்டலுக்கு பயந்து, மக்கள் சொந்த மண்ணில் அகதிகளைப் போல நடத்தப்பட்ட விதத்தை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது.

இவ்வாறு, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து, மக்களாட்சியின் மகத்துவத்தை மறந்து, வன்முறையில் ஈடுபடுவது மட்டுமே திமுக-வினரின் வாடிக்கை.

நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது.

எனவே , 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags: Erode East constituency by electionv chandrakumaraiadnkchandrakumaraiadmk boycottDMKepsevks elangovanErode East constituency
ShareTweetSendShare
Previous Post

சேலத்தில் சிறைக்கைதிகளால் பயிரிடப்பட்ட கரும்பு அறுவடை தீவிரம்!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேமுதிக புறக்கணிப்பு!

Related News

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies