சென்னை செங்குன்றம் தீர்த்த கரையம்பட்டு ஊராட்சியில், அறிவு கடல் திருவள்ளூவர் அறக்கட்டளை சார்பில் கிராமிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் அந்தோணி தலைமை தாங்கினார். அப்போது உழவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் முன்னிலையில், 11 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.