இயற்கை மாற்றம் அடைவதற்கு முன்பு, நாம் மாற்றம் அடைந்தால்தான் பேரிடர்களை தடுக்க முடியும் என்று சாதனைப் பெண் முத்தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற பெண் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்தில் 16 ஆயிரம் அடி உயரமுள்ள மவுண்ட் வின்சன் என்ற சிகரத்தில் ஏறி கடந்த வாரம் சாதனை படைத்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஏப்ரல் மாதம், வட அமெரிக்க கண்டத்தில் உள்ள மவுண்ட் டெனாலி என்ற உயரமான சிகரத்தில் ஏறி சாதனை படைக்க உள்ளதாக தெரிவித்தார்.