உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் உள்ளுர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கூறி உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் சீறிப்பாய தயாராகி வரும் நிலையில், உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட காளையின் உரிமையாளர்கள் வாடிவாசல் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதி கட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாகவே உள்ளூர் காளைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.