சேலத்தில் காணும் பொங்கலை ஒட்டி இறைச்சிக் கடைகளில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் அசைவ பிரியர்கள் திரண்டனர்.
ஒரு கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆட்டு இறைச்சி சுமார் ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டது. இதேப்போல், கோழி, மீன் ஆகிய இறைச்சிகளின் விலையும் அதிகரித்தது குறிப்பிடத்தகக்து.