நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மாடு பூ தாண்டும் விழா களைகட்டியது.
போடிநாயக்கன்பட்டியில் பூ தாண்டும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 10 கோயில் மாடுகள் கலந்து கொண்டன. அப்போது மாடுகளை மேளதாளங்கள் முழங்க இளைஞர்கள் ஆடல் பாடலுடன் ஊரை சுற்றி கோயிலுக்கு அழைத்து வந்தனர்.
இதனைதொடர்ந்து ஒரே நேர் கோடாக பூ, மஞ்சள், பழம், குங்குமம் போடப்பட்டிருந்தது. எதிர் திசையில் 500 மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்த மாடுகள் சீறிப்பாய்ந்து வந்தன.
ஒரு கன்றுக்குட்டியும், ஒரு காளையும் ஒரே நேரத்தில் கோட்டை தொட்டதால் இரண்டிற்கும் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.