அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற வீரர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிலும் பங்கேற்றதால் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. இதில் களம் கண்ட கார்த்தி என்பவர். இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் மூன்றாம் சுற்றில் கலந்து கொண்டார்.
இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் விழா கமிட்டியினர் அறிவுறுத்தலின் பேரில் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். மதுரையில் நடைபெறும் மூன்று ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே வீரர்கள் அல்லது காளைகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தகக்து.