சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை ஒட்டி முதலாம் ஆண்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
தேவரம்பூர் கிராமத்தில் உள்ள திருப்பத்தூர்- சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 35 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. நிர்ணயிக்கப்பட்ட பந்தய எல்லைகளை நோக்கி வண்டியில் பூட்டப்பட்ட காளைகள் சீறி பாய்ந்தன.
இதனை சாலையின் இருபுறங்களில் நின்று பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கத் தொகையும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.