வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை - அண்ணாமலை வரவேற்பு!
Oct 9, 2025, 05:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட உச்ச நீதிமன்றம் தடை – அண்ணாமலை வரவேற்பு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 10:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்த, உச்ச நீதிமன்றம் ஆணைக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளதார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது :

“கடந்த ஆண்டு, வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட, திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இது, வள்ளலாரின் பெருவெளி மெய்யியலுக்கு எதிரான செயல் என்று வள்ளலார் பக்தர்கள், தமிழக பாஜக
உள்ளிட்ட பல அமைப்புகள், கண்டனங்கள் தெரிவித்ததோடு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் திரு. வினோத் ராகவேந்திரா அவர்கள் தொடர்ந்த வழக்கில், சர்வதேச மையக் கட்டடங்கள் கட்ட, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடை நிலுவையில் இருக்கும்போதே, சத்திய ஞானசபைக்குச் சற்றுத் தள்ளி உள்ள பகுதியில், சர்வதேச மையக் கட்டடங்கள் கட்டத் தொடங்கியது தமிழ்நாடு அரசு. இந்த அத்துமீறலை எதிர்த்தும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை கோரியும் சகோதரர் வினோத் ராகவேந்திரா ,  உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வள்ளலார் சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தும், புதிய கட்டுமானங்கள் எழுப்ப, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி, உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

வள்ளலார் பெருமானின் பக்தர்களுக்கு, மிகுந்த ஆறுதலாக அமைந்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.

திமுக அரசு, பக்தர்களை மேலும் காயப்படுத்தாமல், சர்வதேச மையக் கட்டுமானங்களை, வள்ளலார் பெருவெளியில் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: k annamalaiannamalai bjpbjp k annamalaik annamalai newsk annamalai news todayVadalur Vallalar Sathyagnana Sabha premises.construction of international research center buildingk Annamalai BjpSathya Gnanasabhasupreme courtbjp annamalaiannamalai
ShareTweetSendShare
Previous Post

வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் வரும் அரிய நிகழ்வு – சென்னை பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு!

Next Post

கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Related News

மதுரை : மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அசுத்தம் செய்யப்பட்ட விவகாரம் : கழிவுகள் கலந்த நீரை ஆய்வுக்கு எடுத்துச் சென்ற அதிகாரிகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை நயன்தாரா!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies