ஈவெரா குறித்த தமது பேச்சுக்கு கி.வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஈவெராவா? பிரபாகரனா? என மோதிப் பார்த்திட வேண்டியது தான் என்றும், தமிழ் மொழியை கடுமையாக விமர்சித்தவர் ஈவெரா எனவும் கூறியுள்ளார்.
தமிழ் மொழியை தாழ்த்தி பிற மொழிகளை உயர்த்தி ஈவெரா பேசியதாகவும், ஈவெரா பேசியதை எடுத்துக் கூறுவதில் என்ன தவறு என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.