பொதுநிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த ஞானசேகரன் என்பவரை தான் தம்பி என அழைத்ததாக சபாநாயகர் அப்பாவு விளக்கமளித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானசேகரன் என்ற பெயரை மையப்படுத்தி விளையாட்டாக பேசியது சர்ச்சையாகிவிட்டதாகவும், தான் பேசிய காணொளி வெட்டி ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விஜய்யை கண்டு திமுக அஞ்சவில்லை என்’றும், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்த போதிலும் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் சிலர் செயல்படுகிறார்கள் என விஜய் பெயரை குறிப்பிடாமல் அப்பாவு சாடினார்.