அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.
குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் சட்டவிராேதமாக குடியேறியவர்களில் 3 சதவீதம் பேர் இந்தியர்கள் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமெரிக்காவின் புதிய அதிபரான ட்ரம்ப், சட்ட விரோதமாக தங்கி இருப்பவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் ஆயிரத்து 100 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.