சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொல்லப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாரளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தார். இதை தொடர்ந்து திருமயத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், சீமான் ஒருநேரம் அந்நியனாக இருப்பார் மற்றொரு நேரம் அம்பியாக மாறுவார் என விமர்சித்தார். மேலும், சீமானின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.