தமிழகத்தில் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரி உயர்வால் திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழக ஆளுநரை எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையிலேயே திமுக அரசு உள்ளதுதாகவும், தமிழக அரசு தொடர்ந்து ஆளுநர் மீது வன்மத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் என்றும் எல்.முருகன் கூறினார்.