ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ததால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால், பன்னீர்செல்வம் பூங்கா அருகே அமைந்துள்ள தேவாலயத்தில் கிறித்துவ மக்கள் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியே வந்தனர்.
அப்போது, அவர்களிடம் நாம் தமிழர் கட்சி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.