மத்திய அரசு எதைச்செய்தாலும் அதைக் குறைகூறி திமுக அரசு அரசியல் செய்வதாக சரத்குமார் விமர்சித்துள்ளார்.
தென்காசியில் நடைபெற்ற பாஜக மாவட்ட தலைவர் அறிமுக விழாவில் சரத்குமார் பங்கேற்று பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும், அபிவிருத்தியும் இல்லை என தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை மறைக்க அக்கட்சியினர் வெற்று முழக்கமிடுவதாக அவர் சாடினார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான் என்றும், ”தமிழகத்தில் தாமரை மலரும் காலம் கனிந்து விட்டதாகவும் சரத்குமார் கூறினார்.