திமுக ஆட்சி இந்து மக்களுக்கு எதிராக உள்ளது என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி மதுரை பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி அறப்போராட்டம் நடத்துவதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அனுமதி வழங்கியது. இதையடுத்து பழங்காநத்தம் பகுதியில் இந்து அமைப்பினர் அறப்போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய அவர், 2026 முதல் தமிழகத்தில் முருகனின் ஆட்சி தான் நடைபெறும் என தெரிவித்தார். திமுக ஆட்சி இந்து மக்களுக்கு எதிராக உள்ளது என எச். ராஜா குற்றம் சாட்டினார்.