காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசு தலைவர் உரை மீதான விவதாங்களுக்கு பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்,
மக்களுக்கு பாஜக என்றும் போலியான வாக்குறுதிகளை வழங்குவதில்லை என்றும், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை கொண்டு சேர்ப்பதே தங்களின் வேலை எனவும் கூறினார். மேலும் மற்றவர்களை போல் மாளிகை கட்டிக்கொள்ளாமல் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக கூறினார். மேலும் பாஜக அரசு வெற்று முழக்கங்களை கொடுக்காமல் திட்டங்களை கொடுத்ததாக பெருமிதம் தெரிவித்தார்.
ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு சிலர் வறுமையை பற்றி பேசுவதாக பிரதமர் மோடி விமர்சித்தார். ஆனால் நடுத்தர மக்களின் சேமிப்பை உயர்த்தக் கூடிய வகையில் வருமான வரித்துறையில் பல மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் இளைஞர்களுக்காகவே மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார்