உதகையில் இருந்து மசினக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கல்லட்டி மலைப்பாதையில், மலைவேடன் வகுப்பைசேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள், தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த திடீர் மறியல் போராட்டத்தால் உதகை – மசினக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.