சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி பேசிய உரை முருக பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
நெற்குப்பை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம், தான் 28 ஆண்டுகளாக நீதித்துறையில் பணியாற்றி, ஒரு லட்சம் தீர்ப்புகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ஒன்று கூட தான் வழங்கியதல்ல எல்லாம் அவன் வழங்கியது என பேசியுள்ளார்.