திருப்பத்தூர் அருகே, திமுக துணைத்தலைவரின் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் அருகே கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி, மட்றப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார்.
இவர் தனது மனைவி வசந்தியுடன் இருந்தபோது, மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து சரமாரி கத்தியால் வெட்டியதில், வசந்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதி, மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருப்பதி வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் வழி பிரச்சனை இருந்து வந்த நிலையில், பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே இடம் பிரச்சனை தொடர்பாக மர்மநபர்கள் இந்த கொடூரத்தை அரங்கேற்றினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.