பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருவதாகவும், பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட” என்ற சொல்லுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், நிர்வாக திறமையற்ற காட்டாட்சியை திமுக நடத்தி வருவதாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பாலியல் குற்றங்களை தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ள இபிஎஸ், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறி வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் 2026 தேர்தலில் திமுக-வின் காட்டாட்சி தர்பாரை வீழ்த்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,
மீதமுள்ள ஆட்சிகாலத்திலாவது திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் பாலியல் குற்றங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.