புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் மற்றும் 250 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர்.
முதலில் கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக களம் இறக்கப்பட்டனர் அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் உறுதிமொழியை வாசிக்க தொடர்ந்து போட்டி நடைபெற்றது. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்க முற்பட்டனர்.