ஆந்திரா அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் பெண் கூலித் தொழிலாளிகள் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், பல்நாடு அருகே பொல்லாவரம் அருகே மிளகாய் பறிக்க சென்ற பெண் கூலி தொழிலாளர்கள், மீண்டும் டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.
முப்பாலம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த கால்வாயில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிராக்டர் மீது அமர்ந்து பயணம் செய்த 10 பெண்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பெண்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.