முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தில் 6 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
2025- 2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதுதொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.