அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார்.
பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி , அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வழங்கும் இரவு விருந்தில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து பாரிஸில் நாளை நடைபெறும் AI உச்சிமாநாட்டிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து தலைமை தாங்க உள்ளார்.
அன்று மாலையே பிரதமர் மோடி மார்சேய் செல்கிறார். பிப்ரவரி 12ஆம் தேதி தலைவர்கள் போர் கல்லறைக்குச் சென்று, முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்துகிறார்.
மேலும், மார்சேயில், புதிய இந்திய துணைத் தூதரகத்தைத் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.