சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா ஒரு சூப்பர் பவர் என்று ஐ.நா. காலநிலை தலைவர் சைமன் ஸ்டீல் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றின் உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஐ.நா. காலநிலை தலைவர் சைமன் ஸ்டீல் இந்தியா வந்துள்ளார்.
இந்நிலையில் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த சைமன் ஸ்டீல், 100 ஜிகாவாட்களுக்கு மேல் சூரியமின் சக்தி உற்பத்திக்கான அலகுகளை நிறுவிய உலகின் நான்கு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான இந்தியாவின் முயற்சி பாராட்டுக்குரியது எனவும் அவர் கூறினார். மேலும், இவ்விஷயத்தில் சில அரசாங்கங்கள் பேச மட்டுமே செய்கின்றன எனவும், ஆனால், இந்தியா செயலில் காட்டியுள்ளது என்றும் சைமன் ஸ்டீல் கூறினார்.