இல்லந்தோறும் மதுவை கொண்டு செல்லும் திமுக அரசு, மாணவர்களுக்கு பயனளிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஶ்ரீகாந்த் கருனேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் பேருந்து நிலையம் அருகே பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பின்னர் பேட்டியளித்த ஶ்ரீகாந்த் கருனேஷ் , தமிழகத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் திமுக அரசு தமிழர்களின் பண்பாட்டையும், மரபையும் சீரழித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.