மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் மனைவியை ரயில் ஏற்றிவிட்டு வண்டியில் இருந்த கீழே இறங்கிய கணவர் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
திருவாரூரில் உள்ள திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் . இவரது மனைவி அகமாதபாத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால், அவரை வழியனுப்பி வைக்க மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்துள்ளார்.
மனைவி ராணியை சீட்டில் அமர வைப்பதற்காக ரயிலில் ஏறிய பாலசுப்பிரமணியன், வண்டி புறப்பட்டதால் பதற்றத்தில் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் தலையில் படுகாயமடைந்த அவரை மீட்ட ரயில்வே போலீசார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிக்சைக்காக பாலசுப்பிரமணியன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.