தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.
மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சீனி விஸ்வநாதனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
பாரதியாரும் அவரது பணிகளும் நமக்கு எப்போதும் தேவை என தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள அனைவரும் பாரதியாரை தங்கள் தோள்களில் சுமக்க வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை எனவும், தமிழ்.. தமிழ்… என்று பேசுபவர்கள் யாரும் தமிழுக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் சேவையாற்றவில்லை எனவும் விமர்சித்தார்.