கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் கல்லூரி பேராசிரியை மற்றும் மாணவி உயிரிழந்தனர்.
நாகர்கோவிலிலுருந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர் என 45 பேர் பேருந்தில், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். தொடர்ந்து மாட்டுப்பட்டி எக்கோ பாயிண்ட் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கல்லூரி மாணவி மற்றும் பேராசிரியை என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.