திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ள #GetOutStalin ட்ரெண்டிங்கில் உள்ளது.
தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் என தெரிவித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை #GetOutStalin ஹேஷ்டேக்குடன் இன்று காலை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனை சுமார் 8 லட்சத்து 24 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். X தளத்தில் அரசியல் பிரிவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் #GetOutStalin இருந்து வருகிறது.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் BL சந்தோஷ், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் H ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பதிவிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.
இதேபோல் தமிழக பாஜக நிர்வாகிகளான அமர் பிரசாத் ரெட்டி, S G சூர்யா, மற்றும் பாஜக ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.