புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் கடந்த சில தினங்களாக அகற்றி வருகின்றனர்.
முன்னறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக கூறி பாரதி வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.