இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 3 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த 3 பேருந்துகளும் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. மேலும் இரண்டு பேருந்துகளில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் காலியாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இத்தாக்குதலை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு செய்திருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஷ் குற்றம்சாட்டியுள்ளார்.