பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அதனை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக்கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு மீதான வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில் மிரட்டல் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்று கொண்டு இருப்பது தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்றும், அதை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனவும், விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறிய புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமான் வற்புறுத்தலால் விஜயலட்சுமி பலமுறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், எனவே இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவிக்க முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.