“அப்பா” என்ற சொல்லை பிராண்ட் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் மக்கள் தாங்களாகவே மனதார அப்பா என்று அழைப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதலமைச்சர் அப்பா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது பிராண்ட் செய்வது போல உள்ளதாக தெரிவித்தார்.
உறவுமுறைகளை மக்கள் மனதார அழைக்க வேண்டுமே ஒழிய பிராண்ட் செய்ய கூடாது என்றும் அவர் கூறினார்.
முதல்வர் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் தானாகவே தமிழக மக்கள் அப்பா என்று அவரை அழைப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.