விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மத்திய அமைசசர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட -கிசான் சமான் நிதி திட்டம் நேற்றுடன் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
, கடந்த ஆறு ஆண்டுகளாக ஏறத்தாழ 3.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆறாவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, தேசம் முழுவதும் உள்ளள 9.8 கோடி விவசாயப் பெருமக்களுக்கு, 19-வது தவணையாக 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியானது நேரடியாக வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேசத்தின் அடிப்படை ஆதாரமாக விளங்கக் கூடிய விவசாயமும், விவசாயிகளும் செழித்து வாழ்வதற்குத் தேவையான நலத்திட்டங்களை வழங்கி வரும், பாரதப் பிரதமர் மோடிக்கு நாடெங்கும் உள்ள விவசாயப் பெருமக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எல்.முருகன் கூறியுள்ளார்.