சுய விருப்பு வெறுப்பின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே மீண்டும் அதிமுகவை எழுச்சிமிகு கட்சியாக உருவாக்க முடியுமென வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, மதுரை உசிலம்பட்டி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட வி.கே.சசிகலா, மாணவ – மாணவிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், பெண்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உள்ளதென தெரிவித்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்திருப்பதாக கூறிய சசிகலா, “அப்பா” செயலியை வைத்துக்கொண்டு திமுக அரசு விளம்பரம் தேடுவதாக குற்றம் சாட்டினார்.