ஞானசேகரன் மீதான பாலியல் வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன், மீது சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், குற்றப்பத்திரிகை நகலை ஒப்படைக்க, சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
முறைப்படி ஆவணங்களில் கையெழுத்திட்டு, குற்றப்பத்திரிகையை, ஞானசேகரன் பெற்றுக்கொண்டதை அடுத்து, வழக்கு விசாரணையை சென்னை பெரியமேடு அல்லிகுளம் வளாகத்தில் செயல்படும் மகிளா சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, நீதிபதி உத்தரவிட்டார்.